Saturday, January 9, 2010
இஸ்லாமியத் தீவிரவாதம் மலேசியாவில் பிரசவமாகிவிட்டது
இது வரைக்கும் கர்ப்பத்தில் வளர்ந்த இஸ்லாமியத் தீவிரவாதம் மலேசியாவில் கடந்த 01.01.10ல் புத்தாண்டின் வருகைக்கு முன்னதாகவே பிரசமாகி விட்டது.
புத்தாண்டு ஆராதனையில் கலந்து கொள்ள மலேசியக் கிறிஸ்தவர்கள் ஆலயத்திற்குப் புறப்பட்டபோது இந்தத் தீவிரவாதத்தின் அட்டகாசத்தைக் காண நேர்ந்தது.
மலேசிய கத்தோலிக்க திருச்சபை தனது மாதாந்திர ஏடானா ஹெரால்ட் என்ற பத்திரிகையில் ‘அல்லா‘ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு நாட்டின் உள்துறை அமைச்சு தடை விதித்திருந்தது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த 31.12.2009ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ‘அல்லா‘ என்ற சொல்லின் பயன்பாடு இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பு, பல இஸ்லாமியத் குழுக்களுக்கு ஆத்திரத்தையும் எரிச்சலையும் கிளப்பி உள்ளது. அதனால், அவர்கள் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பல மறைமுகமான மற்றும் நேரடியான நடவடிக்கையில் இறங்கத் தொடங்கியுள்ளனர்.
அதன் விளைவாக, 31ந் தேதி இரவு என்றும் இல்லாத அளவு கடுமையான சாலை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆராதனை தொடங்கி, அறை மணி நேரம் களித்தே ஆலயத்திற்குள் நுழைய முடிந்தது. கோலாலம்பூருக்குச் செல்லும் 3 வேக சாலையில் 2 வேக சாலை அடைக்கப்பட்டது. எனவே, வாகனங்கள் நின்று நின்று செல்ல வேண்டியதாயிற்று.
காவல் துறையினர் கடைமுறைக்கு ஓரிரு மோட்டார் சைக்கிள்களை மட்டும் தடுத்து நிறுத்து, ஏதோ ஒப்புக்கு அவர்களிடம் பரிசோதனை செய்தனர். எங்கள் கண் முன்னாலேயே பல மோட்டார் சைக்கிள்கள் விரைவாகக் கடந்து செல்வதைக் காண முடிந்தது. இது எங்களுக்கு காவல் துறையின் மீது சந்தேகத்தையும் கிளப்பியது. இவர்கள் உண்மையில் எதற்காக சாலைத் தடுப்பு போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தச் சாலைத் தடுப்புக்கு நியாயமான காரணம் இல்லை என்றால், அதிகாரம் வகிப்பவர்கள் கிறிஸ்தவர்களை மறைமுகமாகப் பலி வாங்குகிறார்கள் என்று கருத நேரிடும்.
இதனை அடுத்து கடந்த 08.01.10ல், நான்கு தேவாலயங்கள் எரியூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக இணையச் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், மூன்று தேவாலயங்கள் என்று பத்திரிகை செய்தி அறிவித்துள்ளது. அதன் செய்தியை இங்குக் காணலாம்...
http://sg.news.yahoo.com/ap/20100108/tap-as-malaysia-allah-ban-2nd-ld-writeth-b3c65ae.html
இன்று காலையிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலையில் பல கிறிஸ்தவர்கள் தேவ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். எனவே, உயிருடற் சேதம் உண்டு பண்ணும் நோக்கில் அடையாளம் தெரியாதத் தீவிரவாதக் கும்பல்கள் தாக்குதல் நடத்தலாம். எல்லாவற்றையும் தேவனின் பாதுகாப்பில் விட்டுவிடுகிறோம்.
மற்ற செய்திகளைப் பிறகு அறிவிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment