Sunday, October 31, 2010

தித்திவாங்சா அம்னோ தொகுதித் தலைவரின் அடாவடிப் பேச்சு

கடந்த வாரம் நடந்து முடிந்த தேசிய அம்னோ பேராளர் மாநாட்டில், தித்திவாங்சாவில் அம்னோவின் வெற்றிக்கு சீனர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகள் தேவையில்லை என்று பேசியிருக்கிறார். அவருடைய பேச்சுக்கு பல பேராளர்கள் கைதட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனைப் இங்கே யூடியுப்பில் காணலாம்.

அவர் ஏதோ ஒரு உணவு உற்பத்திக்கு அதிபர் ஆவார் என அறியப்படுகிறது. அந்த உணவு/குளிர்பான வகைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு நண்பர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும், அவருடைய பேச்சைக் கண்டித்து அம்னோ தேசியத் தலைவருமாகிய பிரதமர் நாஜிப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தப் பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாதோர் தேசிய முன்னணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். தேசிய முன்னணியின் தோல்விக்குக் காரணம் இன்னதென்று அவர்கள் அறியும்போது, இந்த விவகாரம் தலைதூக்க வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலில் பல மாநிலங்களை இழந்த நிலையில் தனது கோரைப் பல் உடைந்து போன நிலையில் இன்னும் அம்னோ தலைவர்கள் அடாவடித் தனமாகப் பேசுவதைப் பார்த்தால் அவர்களுக்கு இன்னும் புத்திவரவில்லை என்று தெரிகிறது.

நாம் அவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்.

No comments:

Post a Comment